ஆதியாகமம் Chapter 5

For English

Read ஆதியாகமம் Chapter 5 Online

Read ஆதியாகமம் Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ஆதியாகமம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ஆதியாகமம் and the Holy Bible online.

Choose a Chapter

ஆதியாகமம் 5

1. ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.

2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

4. ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

5. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

6. சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

7. சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

8. சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

10. ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

11. ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

12. கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

13. கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

14. கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம், அவன் மரித்தான்.

15. மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

16. மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

17. மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

18. யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

19. யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

20. யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.

22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

25. மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

26. மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

27. மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.

28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

29. கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.

30. லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

31. லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.

32. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

About ஆதியாகமம் Chapter 5

Read ஆதியாகமம் Chapter 5 online from the Holy Bible. This chapter is part of the Book of ஆதியாகமம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ஆதியாகமம்
Chapter: 5
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ஆதியாகமம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ஆதியாகமம் Chapter 5 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ஆதியாகமம் Chapter 5?

ஆதியாகமம் Chapter 5 is part of the Book of ஆதியாகமம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ஆதியாகமம் Chapter 5 online for free with easy chapter navigation.

More Chapters from ஆதியாகமம்

  1. ஆதியாகமம் Chapter 20
  2. ஆதியாகமம் Chapter 9
  3. ஆதியாகமம் Chapter 7
  4. ஆதியாகமம் Chapter 3
  5. ஆதியாகமம் Chapter 43
  6. ஆதியாகமம் Chapter 39
  7. ஆதியாகமம் Chapter 37

Explore More from பழைய ஏற்பாடு

  1. லேவியராகமம் Chapter 16
  2. உபாகமம் Chapter 2
  3. மீகா Chapter 7
  4. எசேக்கியேல் Chapter 28
  5. யோசுவா Chapter 5
  6. ஆகாய் Chapter 1
  7. ஏசாயா Chapter 26

Related Chapters & Readings

  1. சங்கீதம் Chapter 12
  2. 1 கொரிந்தியர் Chapter 11
  3. நீதிமொழிகள் Chapter 27
  4. எரேமியா Chapter 24
  5. 1 கொரிந்தியர் Chapter 13
  6. யோசுவா Chapter 14
  7. எண்ணாகமம் Chapter 35
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *