ஏசாயா Chapter 50

For English

Read ஏசாயா Chapter 50 Online

Read ஏசாயா Chapter 50 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ஏசாயா and the Holy Bible online.

Choose a Chapter

ஏசாயா 50

1. கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.

2. நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.

3. நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.

4. இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

5. கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை.

6. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

7. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

8. என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.

9. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

10. உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

11. இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜுவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.

About ஏசாயா Chapter 50

Read ஏசாயா Chapter 50 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ஏசாயா
Chapter: 50
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ஏசாயா. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ஏசாயா Chapter 50 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ஏசாயா Chapter 50?

ஏசாயா Chapter 50 is part of the Book of ஏசாயா in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ஏசாயா Chapter 50 online for free with easy chapter navigation.

More Chapters from ஏசாயா

  1. ஏசாயா Chapter 28
  2. ஏசாயா Chapter 21
  3. ஏசாயா Chapter 54
  4. ஏசாயா Chapter 37
  5. ஏசாயா Chapter 34
  6. ஏசாயா Chapter 9
  7. ஏசாயா Chapter 45

Explore More from பழைய ஏற்பாடு

  1. 2 நாளாகமம் Chapter 36
  2. 2 சாமுவேல் Chapter 23
  3. ஏசாயா Chapter 26
  4. லேவியராகமம் Chapter 27
  5. 2 இராஜாக்கள் Chapter 17
  6. ஏசாயா Chapter 66
  7. லேவியராகமம் Chapter 2

Related Chapters & Readings

  1. உபாகமம் Chapter 1
  2. நீதிமொழிகள் Chapter 3
  3. நியாயாதிபதிகள் Chapter 14
  4. சங்கீதம் Chapter 48
  5. எசேக்கியேல் Chapter 31
  6. உபாகமம் Chapter 28
  7. 2 கொரிந்தியர் Chapter 6
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *